< Back
தேசிய செய்திகள்
மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை
தேசிய செய்திகள்

மாட்டை அடித்து கொன்ற சிறுத்தை

தினத்தந்தி
|
26 Aug 2023 3:39 AM IST

கே.ஆர். நகர் தாலுகாவில் மாட்டை அடித்து கொன்ற சிறுத்தையால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

மைசூரு:

கே.ஆர். நகர் தாலுகாவில் மாட்டை அடித்து கொன்ற சிறுத்தையால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

மைசூரு மாவட்டம் கே.ஆா். நகர் தாலுகா ஒசூருகாவல் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வெளியேறி ஒசூருகிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதியடைந்து வருகிறார்கள். இந்தநிலையில் ஒசூருகாவல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து 20-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று ஒசூருகாவல் கிராமத்திற்குள் புகுந்தது. அந்த சிறுத்தை ராஜேஸ்வரிக்கு சொந்தமான கொட்டைகைக்குள் நுழைந்து 2 செம்மறி ஆடுகளை அடித்து கொன்றுவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

மாட்டை அடித்து கொன்றது

இந்தநிலையில் மீண்டும் நேற்றுமுன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, ராஜேஸ்வரி கொட்டகைக்குள் நுழைந்து மாட்டை அடித்து கொன்று பாதி உடலை தின்று மீதியை விட்டுவிட்டு சென்றது. மறுநாள் காலை ராேஜஸ்வரி மாடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக சென்றார். அப்போது அங்கு மாடு செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் கே.ஆர்.நகர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து விசாரணை நடத்தினர். விசாரணயைில் சிறுத்தை மாட்டை அடித்து கொன்று பாதி உடலை தின்று, அதனை அங்கேயே போட்டு விட்டு சென்றது தெரியவந்தது.

வனத்துறையினருக்கு கோரிக்கை

இதையடுத்து வனத்துறை அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஒசூரு காவல் கிராமத்தில் சிறுத்தை அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் கால்நடைகளையும் அடித்து கொன்று வருகிறது. இதனால் நாங்கள் பீதி அடைந்து உள்ளோம். மேலும் சிறுத்தை நடமாட்டத்தால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளோம்.

எனவே அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் எனவும் ,சிறுத்தை அடித்து கொன்ற மாடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிறுத்தையை பிடிக்க கூண்டு ஒசூருகாவல் கிராமத்தில் கூண்டு வைக்கப்படும்.

இழப்பீடு

மேலும் சிறுத்தை தாக்கி செத்த மாடுகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்