சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை செத்தது - 2 பேர் கைது
|சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை செத்தது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர்
மங்களூரு-
சுள்ளியா அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை செத்தது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் ைகது செய்தனர்.
சிறுத்தை அட்டகாசம்
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா அரந்தோடு கிராமம் வனப்பகுதியைெயாட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி சிறுத்தை, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதியடைந்து உள்ளனர். மேலும் வேலைக்கு செல்ல முடியாமல் பயந்து அவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதிைய சேர்ந்த சிலர் வனப்பகுதியில் சுருக்கு கம்பியை வைத்திருந்தனர். இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து இரை தேடி சிறுத்தை ஒன்று வெளியேறியது. அந்த சிறுத்தை மர்மநபர்கள் வைத்திருந்த சுருக்கு கம்பியில் சிக்கி செத்தது.
இந்தநிலையில், அந்த வழியாக சென்றவர்கள் சிறுத்தை செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் சுருக்கு கம்பியில் சிக்கி செத்து கிடந்த சிறுத்தையை மீட்டனர்.
1½ வயது சிறுத்தை
பின்னர் கால்நடை மருத்துவரை வரவழைக்கப்பட்டு சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே குழி தோண்டி புதைத்தனர். விசாரணையில், செத்துபோன சிறுத்தைக்கு 1½ வயது என்றும். அந்த சிறுத்தை மர்மநபர்கள் வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி செத்ததும் தெரியவந்தது.
மேலும் வனப்பகுதியில் சுருக்கு கம்பியை வைத்த மர்மநபர்கள் யார்? என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், அதேப்பகுதியை சேர்ந்த ஜெயராம், பிருத்வி ஆகிய 2 பேரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 2 பேரும் வனப்பகுதியில் சுருக்கு கம்பியை வைத்ததை ஒப்புக்கொண்டனர்.
2 பேர் கைது
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவர்கள் 2 பேர் மீதும் சுள்ளியா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் ஜெயராம், பிருத்வியை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.