< Back
தேசிய செய்திகள்
நமிபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப்புலி உயிரிழப்பு
தேசிய செய்திகள்

நமிபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப்புலி உயிரிழப்பு

தினத்தந்தி
|
27 March 2023 7:47 PM IST

நமிபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிவிங்கிப்புலி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் 1952- ஆம் ஆண்டு முற்றிலும் அழிந்துவிட்ட இனமாக அறிவிக்கப்பட்ட சிவிங்கிப் புலிகள் (சீட்டாக்கள்) இந்திய வனங்களில் மீண்டும் கொண்டு வருவதற்கு இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் பலனாக 70 ஆண்டுகளுக்குப் பிறகு சிவிங்கிப்புலி மறுஅறிமுகத்திட்டம் மூலமாக 8 சிவிங்கிப் புலிகள் இந்தியாவிற்கு நாளை கொண்டு வரப்பட்டது. இதற்காக நமீபியாவிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

3 ஆண் சிவிங்கிப் புலிகள், 5 பெண் சிவிங்கி புலிகள் என மொத்தம் 8 சிவிங்கி புலிகள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து மத்தியப்பிரதேசம் கொண்டுவரப்பட்டும் இந்த சிவிங்கி புலிகள் குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டது.

இந்தநிலையில், நமிபியா நாட்டில் இருந்து கடந்தாண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட பெண் சிவங்கிப்புலி (ஷாஷா) பரிதாபமாக உயிரிழந்தது. மத்திய பிரதேசம் மாநிலம் குணோ தேசிய விலங்கியல் பூங்காவில் விடப்பட்ட இந்த சிவிங்கிப்புலிக்கு சிறுநீரககோளாறு இருந்து வந்ததாக அம்மாநில வனத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்