< Back
தேசிய செய்திகள்
நாட்டின் பெயரை மாற்றுவதை விட  மக்களின் வாழ்க்கையை மாற்றுவதே முக்கியம்
தேசிய செய்திகள்

நாட்டின் பெயரை மாற்றுவதை விட மக்களின் வாழ்க்கையை மாற்றுவதே முக்கியம்

தினத்தந்தி
|
7 Sept 2023 12:15 AM IST

நாட்டின் பெயரை மாற்றுவதை விட மக்களின் வாழ்க்கையை மாற்றுவதே முக்கியம் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

சதாசிவ நகர்

டி.கே.சிவக்குமார் பேட்டி

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் பெங்களூரு சதாசிவநகர் பகுதியில் உள்ள தனது குடியிருப்பு முன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. இந்தியா கூட்டணியை பார்த்து பயந்து இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றுகிறார்கள். நாட்டின் பெயரை மாற்றுவதை விட மக்களின் வாழ்க்கையை மாற்றுவதே முக்கியம்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு, உணவு, வேலை கிடைத்தால் அதை மாற்றம் என்று சொல்லலாம். கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் வருவாய் இரட்டிப்பாகி விட்டதா? இல்லை. வங்கி கணக்கிற்கு தலா ரூ.15 லட்சம் வந்துவிட்டதா?.

சிந்தனை மாற வேண்டும்

நாட்டின் பெயரை மாற்றுவதால் எதுவும் நடைபெற போவது இல்லை. நமது சிந்தனை மாற வேண்டும். ரூபாய் நோட்டுகள் மீதும் இந்தியா என்று தான் பெயர் உள்ளது. அதையும் மாற்றுவார்களா?. நாம் அனைவரும் இந்தியர்களே.

ஆனால் தேர்தல் தோல்விக்கு பயந்து நாட்டின் பெயரை மாற்றுவது சரியல்ல. பா.ஜனதாவிடம் இன்னும் பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. அதை சொன்னால் அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள். இதுகுறித்து நான் இன்னொரு நாள் பேசுகிறேன்.

இந்தியா பெயர் மாற்றத்தை நான் எதிர்க்கிறேன். இத்தகைய அரசியல் நீண்ட நாட்களுக்கு நடைபெறாது. பா.ஜனதாவினர் நீண்ட காலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாது. அதனால் இந்தியா பெயர் மாற்றத்தை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


மேலும் செய்திகள்