< Back
தேசிய செய்திகள்
நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவர் வெடித்து சிதறும் அபாயம் - ஆராய்ச்சியாளர்கள் தகவல்
தேசிய செய்திகள்

நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவர் வெடித்து சிதறும் அபாயம் - ஆராய்ச்சியாளர்கள் தகவல்

தினத்தந்தி
|
21 Oct 2023 10:07 PM IST

நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் ரோவர் மற்றும் லேண்டர் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

'சந்திரயான் 3' ரோவர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக 'சந்திரயான் 3' விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது. இது சுமார் 40 நாட்கள் பயணத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி இமாலய சாதனை படைத்து உள்ளது. விண்வெளித்துறையில் கொடிகட்டி பறக்கும் நாடுகளே செல்லாத நிலையில் இஸ்ரோ தரை இறங்கியது அனைத்து நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தொடர்ந்து நிலவின் கனிமவளங்கள் இருப்பதை ஆய்வு செய்த ரோவர் நிலவு நாள் முடிந்தவுடன், நிலவில் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.

வெடித்து சிதறும் அபாயம்

தற்போது அதற்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. நிலவில் இருந்து இந்த அச்சுறுத்தலை ரோவர் எதிர்கொள்ள இருக்கிறது. நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் அடிக்கடி நுண் விண் கற்கள் விழும். நிலவில் நுண் விண் கற்கள் விழும்போது குண்டுவெடித்தால் ஏற்படும் பாதிப்பு போன்று ஏற்படுத்தும். தற்போது நிலவில் நுண் விண் கற்கள் விழுகிறது. 'சந்திரயான் 3' ரோவர் நிலவில் உறங்கும் நிலையில் அந்தபகுதியில் நுண் விண் கற்கள் விழுந்தால் அது ரோவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எனவே லேண்டர், ரோவர் மீது நுண் விண்கல் விழுந்தால் அது வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'நிலவின் மேற்பரப்பில் தொடர்ந்து விழும் நுண் விண் கற்களால் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் பாதிக்கப்படலாம். நிலவில் அப்பல்லோ விண்கலம் கடந்த காலங்களில் இது போன்ற பிரச்சினையை சந்தித்து. இதனால் ரோவர் சில சேதங்களை சந்திக்கலாம் என்கின்றனர்.

மேலும் செய்திகள்