< Back
தேசிய செய்திகள்
சந்திரயான்-3 விண்கலம்: விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு
தேசிய செய்திகள்

சந்திரயான்-3 விண்கலம்: விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைப்பு

தினத்தந்தி
|
18 Aug 2023 2:04 AM GMT

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைக்கப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டா,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்காக வெற்றிகரமாக அனுப்பியது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து 'லேண்டர்' நேற்று வெற்றிகரமாக பிரிந்தது. நிலவில் 23-ந்தேதி தரை இறங்கும் இந்த லேண்டர் சாதனத்துக்குள் உள்ள 'ரோவர்' தனது ஆய்வை தொடங்கும். இதனை பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து தனியாக பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் இன்று குறைக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்று முதல் உயரம் குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டர் ஆக.23-ல் நிலவில் தரையிறங்குகிறது. விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையத்துடன் இஸ்ரோ இணைந்து கண்காணித்து வருகிறது.

மேலும் செய்திகள்