< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடிக்காக பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு
தேசிய செய்திகள்

பிரதமர் மோடிக்காக பதவியேற்பை தள்ளிவைத்த சந்திரபாபு நாயுடு

தினத்தந்தி
|
6 Jun 2024 10:02 AM IST

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

அமராவதி,

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 135-ல் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு ஆட்சியைப் பிடித்தார். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில், இந்த முறை ஜெகன் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.

அவர் வருகிற 8-ம் தேதி அமராவதியில் முதல்-மந்திரியாக பதவியேற்க இருந்தார். இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

நரேந்திர மோடி வரும் 8-ம் தேதி பதவியேற்கும் நிலையில், இந்த விழாவில் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்கிறார். இதற்காகவே சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா வருகிற 12-ம் தேதி நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்