< Back
தேசிய செய்திகள்
சண்டிகார் பல்கலைக்கழகத்தில் ஆபாச வீடியோ கசிந்த விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு
தேசிய செய்திகள்

சண்டிகார் பல்கலைக்கழகத்தில் ஆபாச வீடியோ கசிந்த விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு

தினத்தந்தி
|
20 Sept 2022 3:17 AM IST

சண்டிகார் பல்கலைக்கழகத்தில் ஆபாச வீடியோ கசிந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளனர். இதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதாக வதந்தி பரவியது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவிகள் கடந்த 17-ந்தேதி நள்ளிரவுக்குப்பின் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். அங்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி, தனது ஆபாச வீடியோவை இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த மாணவியும், அந்த வாலிபர் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 3 ேபரை போலீசார் கைது செய்தனர்.

பிற மாணவிகள் ஆபாசமாக படமெடுக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து நேற்று அதிகாலையில் மாணவிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அத்துடன் கல்லூரிக்கு வருகிற 24-ந்தேதி வரை விடுமுறையும் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி குர்பிரீத் கவுர் திேயா மேற்பார்வையில் 3 பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

சம்பவத்தை முழுமையாக விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில போலீஸ் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்