< Back
தேசிய செய்திகள்
சண்டிகர்: எனது மகனை கொன்று விட்டாா்கள் ... நானே சாட்சி... கதறி அழுத ஐ.ஏ.எஸ். அதிகாரி
தேசிய செய்திகள்

சண்டிகர்: எனது மகனை கொன்று விட்டாா்கள் ... நானே சாட்சி... கதறி அழுத ஐ.ஏ.எஸ். அதிகாரி

தினத்தந்தி
|
26 Jun 2022 7:26 AM GMT

எனது மகனை அதிகாரிகள் கொன்று விட்டாா்கள் அதற்கு நானே சாட்சி என ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சய் பொப்லி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சய் பொப்லி என்பவர் கடந்த 20-ந்தேதி ஊழல் வழக்கு ஒன்றில் ஊழல் கண்காணிப்பு உயரதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, அவரது வீட்டில் இருந்து அதிக அளவிலான வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து ஆயுத சட்டங்களின் கீழ் வழக்கு ஒன்றும் பதிவானது.

இந்நிலையில், பொப்லியின் மகனான கார்த்திக் பொப்லி நேற்று மதியம் 1.30 மணியளவில் வீட்டின் முதல் தளத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் அரங்கேறியது.

இந்த நிலையில், ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் எனது மகனை கொன்று விட்டாா்கள். அதற்கு நானே சாட்சி எனவும், அவர்கள் (அதிகாரிகள்) என்னை அழைத்துச் செல்கிறார்கள். என் மகன் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான்," என ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சய் பொப்லி தெரிவித்து உள்ளாா்.

சஞ்சய் பொப்லி வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போது அவரது மகன் காா்த்திக் பாப்லி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாாிகள் தொிவித்து உள்ளனா். ஆனால் தனது மகனை லஞ்ச ஒழிப்பு துறையினா் சுட்டு கொன்று விட்டதாக சஞ்சய் பொப்லியின் மனைவி குற்றம் சாட்டி உள்ளாா்.

சஞ்சயின் வீட்டில் இருந்து 12 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி கைப்பற்றப்பட்டு உள்ளது. அவற்றில் 9 தங்க கட்டிகள், 49 தங்க பிஸ்கட்டுகள், 12 தங்க நாணயங்கள், 3 வெள்ளி கட்டிகள், 18 வெள்ளி நாணயங்கள், 4 ஐபோன்கள் மற்றும் ரூ.3.5 லட்சம் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்