< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
|15 Aug 2024 8:54 AM IST
கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோழிக்கோடு,
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு பெய்துவரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்-ம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.