< Back
தேசிய செய்திகள்
மேக வெடிப்பைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்
தேசிய செய்திகள்

மேக வெடிப்பைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்

தினத்தந்தி
|
14 Aug 2023 2:50 PM IST

மேக வெடிப்பைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

சமோலி,

மேகவெடிப்பு என்பது மிக அதிக அளவு மழை ஒரு குறுகிய நேரத்தில் பெய்வதாகும். இது பெரும்பாலும் மலைப் பகுதிகளில் ஏற்படுகிறது. ஏனெனில் மலைகள், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மேகங்களை உருவாக்குகின்றன. இது வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கும்.

கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அடிக்கடி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் திடீரென அங்குள்ள சமோலி மாவட்டத்தின் நந்தபிரயாக் அருகே மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது.

இதனால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மண் சரிந்து சாலைகளில் விழுந்ததால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேக வெடிப்பினால் பெய்த கனமழையைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடப்பட்டது.

மேலும் செய்திகள்