< Back
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் காலனித்துவ குடியேற்ற திட்டம் தொடக்கம் - மெகபூபா முப்தி
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் 'காலனித்துவ குடியேற்ற திட்டம்' தொடக்கம் - மெகபூபா முப்தி

தினத்தந்தி
|
12 Oct 2022 9:46 AM GMT

வெளியாட்களுக்கு கதவு திறக்கப்பட்டதில் இருந்து குற்ற சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் நீண்டகாலமாக வசிக்கும் பாதுகாப்பு படையினர், வெளிமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக தகுதியுடைய வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம் என மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், ஜம்முவில் ஒராண்டுக்கு மேல் வசிக்கும் தகுதியுடைய வாக்காளர்கள் யாராயினும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய உத்தரவில் ஜம்முவில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் 'காலனித்துவ குடியேற்ற திட்டம்' ஜம்மு தொடங்கிவிட்டது.

இவை முதலில் டோக்ரா கலாச்சாரம், அடையாளம், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்திற்கு முதல் அடியாக இருக்கும்.

ஜம்மு-காஷ்மீரின் மக்கள் தொகை விகிதத்தை மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம். இது ஜம்முவில் இருந்து தொடங்கும். கடல் போல மக்கள் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவுக்கு வருவார்கள், இது டோக்ரா கலாசாரத்தை மட்டுமின்றி, வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் வளம் மீது தாக்குதலை ஏற்படுத்தும். வெளிமாநிலத்தவர்களுக்கு ஜம்முவில் கதவுகள் திறக்கப்பட்டதால் குற்றசம்பங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்