< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மே.வங்காள அரசுடன் இணைந்து செயல்படுகிறோம் - மத்திய கல்வி மந்திரி
|25 July 2022 2:55 AM IST
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மே.வங்காள அரசுடன் இணைந்து செயல்படுவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படவில்லை. அக்கொள்கையையும், மாநில அளவிலான கல்விக்கொள்கையின் அவசியத்தையும் ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழுவை சமீபத்தில் மாநில அரசு அமைத்தது.இந்நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் கொல்கத்தாவுக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேற்கு வங்காளத்தில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால், அதை தீர்த்து வருகிறோம். புதிய கல்விக்கொள்கை, வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடியது. அதை எதிர்ப்பதற்கு காரணமே இல்லை. அனைத்து தரப்பினரும் சாதகமான கருத்துகளையே கூறி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.