< Back
தேசிய செய்திகள்
நீதித்துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு நினைக்கிறது; டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்
தேசிய செய்திகள்

நீதித்துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு நினைக்கிறது; டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால்

தினத்தந்தி
|
24 Jan 2023 3:58 PM IST

நீதித்துறையை கைப்பற்ற மத்திய பாஜக அரசு நினைக்கிறது என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி,

மத்திய அரசுக்கும் - நீதித்துறைக்கும் இடையே கடந்த சில மாதங்களாக லேசான மோதல்போக்கு நிலவி வருகிறது.

நீதித்துறையில் கொலிஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை, அந்த முறையை மாற்றி வேண்டும், நீதிபதிகளை நியமிப்பது மத்திய அரசின் வேலை என்று மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறிவருகிறார்.

நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரிஜிஜூ, நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை, அவர்கள் மக்களின் கண்காணிப்பை எதிர்கொள்வதில்லை. நீதிபதிகளையும், அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையும், அவர்களின் மதிப்பீடுகளையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த கருத்துக்களால் நீதித்துறை - மத்திய அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், நீதித்துறை குறித்து மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்த கருத்துகள் தவறானவை என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், நாட்டில் உள்ள தேசிய சுதந்திரமான அமைப்புகள் அனைத்தையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தபின் தற்போது மத்திய பாஜக அரசு நீதித்துறையை கைப்பற்ற நினைக்கிறது.

மக்கள் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். நீதித்துறை மீதான இத்தகைய தாக்குதல்கள் சரியல்ல' என்றார்.

மேலும் செய்திகள்