புதிய சாப்ட்வேர் மூலம் உளவு பார்ப்பு : மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
|அரசை எதிர்ப்பவர்கள் புதிய சாப்ட்வேர் மூலம் உளவு பார்ப்பதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
அரசை எதிர்ப்பவர்களை உளவு பார்க்க மத்திய அரசு புதிய சாப்ட்வேர் வாங்கியிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பெகாசஸ், கேம்பிரிட்ஜ் அனால்டிகா மற்றும் சமீபத்தில் அம்பலமான 'டீம் ஜோர்ஜ்' வரிசையில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை உளவு பார்க்கவும், கண்காணிக்கவும் மோடி அரசு புதிய சாப்ட்வேரை வாங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், நீதித்துறை, தேர்தல் கமிஷன் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நிறுவனங்கள் அனைத்தும் இந்த பட்டியலில் உள்ளன' என தெரிவித்தார்.
உளவு சாப்ட்வேர்களுக்கு பிரதமர் மோடி இவ்வளவு செலவு செய்கிறார் என்றால், அதானியின் போலி நிறுவனங்களில் உள்ள ரூ.20,000 கோடி யாருக்கு சொந்தமானது என்பதை அவர் ஏன் நாட்டுக்கு சொல்ல முடியாது? என்றும் பவன் கெரா கேள்வி எழுப்பினார்.