< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சி.பி.ஐ. இணை இயக்குனர் பதவி காலம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு
|27 March 2024 10:48 PM IST
சி.பி.ஐ. இணை இயக்குனர் பதவி காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
சி.பி.ஐ.யின் இணை இயக்குனராக இருந்து வரும் சுப்ரியா பாட்டீல் யாதவின் பதவி காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந் தேதியுடன் நிறைவடைய இருந்தது.
இந்த நிலையில் அவரது பதவி காலத்தை ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான சுப்ரியா பாட்டீல் யாதவ் 2025 ஏப்ரல் 17-ந் தேதி வரை சி.பி.ஐ. இணை இயக்குனராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.