மத்திய உள்துறைச் செயலாளருக்கு 4-வது முறையாக பதவி நீட்டிப்பு
|மத்திய உள்துறைச் செயலாளருக்கு 4-வது முறையாக பதவி நீட்டிப்பு ஒப்புதலை வழங்கியுள்ளது மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு.
மத்திய உள்துறைச் செயலாளராக அஜய் பல்லா கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2020-ம் ஆண்டில் தனது 60 வயதில் ஓய்வு பெறவிருந்த நிலையில் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது அஜய் பல்லாவுக்கு 4-வது முறையாக பதவி நீட்டிப்பு அளிப்பதற்கான உத்தரவை மத்திய பணியாளர் அமைச்சகம் அளித்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி வரை உள்துறை செயலாளராக இவர் பதவியில் இருப்பார்.
மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு, இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த நீட்டிப்பின் மூலம், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலின்போதும் அஜய் பல்லா உள்துறைச் செயலாளராக இருப்பார்.
இவர் 1984-ம் ஆண்டு பிரிவு, அசாம்-மேகாலயா 'கேடர்' ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். இவரது பதவி நீட்டிப்புக்கு ஒருநாளுக்கு முன்பு, மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபாவுக்கு 3-வது முறையாக ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.