< Back
தேசிய செய்திகள்
நேரடி வரிகள் வாரிய தலைவர் பதவிக்காலம் 9 மாதம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

நேரடி வரிகள் வாரிய தலைவர் பதவிக்காலம் 9 மாதம் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

தினத்தந்தி
|
1 Oct 2023 5:21 AM IST

நேரடி வரிகள் வாரிய தலைவரின் பதவிக்காலத்தை மேலும் 9 மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

வருமானவரித்துறையை உள்ளடக்கிய உச்ச கொள்கை வகுக்கும் அமைப்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்ளது. 6 உறுப்பினர்களை கொண்ட இந்த வாரியத்தின் தலைவராக நிதின் குப்தா (வயது 60) உள்ளார்.

1986-ம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய்ப் பணி அதிகாரியான நிதின் குப்தா, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.

நிதின் குப்தா நேற்று (சனிக்கிழமை) ஓய்வுபெறவிருந்த நிலையில், அவருக்கு மேலும் 9 மாத காலம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் அவரை மறுநியமனம் செய்வதற்கு மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நிதின் குப்தா, அடுத்த ஆண்டு ஜூன் 30-ந்தேதி அல்லது மறுஉத்தரவு வரும் வரை மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவராக இருப்பார்.

மத்திய அரசின் செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்