< Back
தேசிய செய்திகள்
சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடு மீண்டும் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு
தேசிய செய்திகள்

சர்க்கரை ஏற்றுமதி கட்டுப்பாடு மீண்டும் நீட்டிப்பு - மத்திய அரசு உத்தரவு

தினத்தந்தி
|
19 Oct 2023 4:33 AM IST

சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை மீண்டும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாகவும், ஏற்றுமதியில் 2-வது இடத்திலும் இந்தியா உள்ளது.

ஆனால் உள்நாட்டில் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. வரும் பண்டிகை நாட்களில் மக்களின் சுமையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசின் அனுமதி அல்லது உரிமம் பெற வெண்டியது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுப்பாடு வருகிற 31-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டு இருந்தது.

தற்போது இந்த கட்டுப்பாட்டை 31-ந்தேதிக்கு பின்னரும் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த கட்டுப்பாடு தொடரும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்