< Back
தேசிய செய்திகள்
அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லை அருகே தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!
தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லை அருகே தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்!

தினத்தந்தி
|
22 Oct 2022 2:52 PM IST

அருணாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

அருணாச்சல பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவுடனான எல்லைக்கு அருகில் உள்ள அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சாலை இணைப்பை மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை(என்.ஹச்-15) மற்றும் டிரான்ஸ் அருணாச்சல நெடுஞ்சாலைகள் (என்.ஹச்-13 / என்.ஹச்-215) மற்றும் எல்லைப்புற நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்ட உள்ளன.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், மொத்தம் 2,178 கி.மீ. தூரத்திற்கு ஆறு தாழ்வாரங்கள் அமைக்கப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இணைப்பு சாலைகள் மேம்படுத்தும் பணிகள் சரிவர நிறைவடையாததால் அவற்றை நிறைவேற்றும் பணிகள் நடைபெற உள்ளன.

இதன்மூலம், சீனாவுடனான எல்லை பகுதிகளுக்கு ராணுவ வாகனங்கள் மற்றும் பிற சேவைகள் கொண்டு செல்வது எளிதாக்கப்படும்.

மேலும் செய்திகள்