< Back
தேசிய செய்திகள்
தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முடக்கம்- மத்திய அரசு நடவடிக்கை

Image courtesy: AFP

தேசிய செய்திகள்

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முடக்கம்- மத்திய அரசு நடவடிக்கை

தினத்தந்தி
|
26 Sep 2022 1:03 PM GMT

10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

புதுடெல்லி,

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. புலனாய்வு அமைப்புகளின் தகவலின் அடிப்படையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளை பரப்பியதற்காக யூடியூப் சேனல்களில் இருந்து சில 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் ஒருமுறை முடக்கியுள்ளது.

முடக்கப்பட்டுள்ள இந்த வீடியோக்களை 1 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஏற்கனவே பார்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட வீடியோகளில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட போலிச் செய்தி வீடியோக்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களும் அடங்கும் என தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்