< Back
தேசிய செய்திகள்
மத்திய அரசு பணிக்கு கூடுதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் - மாநிலங்களுக்கு கோரிக்கை
தேசிய செய்திகள்

மத்திய அரசு பணிக்கு கூடுதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் - மாநிலங்களுக்கு கோரிக்கை

தினத்தந்தி
|
29 Sept 2022 12:26 AM IST

மத்திய அரசு பணிக்கு கூடுதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை அனுப்புமாறு மாநிலங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயலாளர்களின் வருடாந்திர மாநாடு டெல்லியில் நடந்தது. இதில் உரையாற்றிய மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங், மத்திய அரசு பணிக்கு கூடுதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ் அதிகாரிகளை அனுப்புமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'அனைத்து இந்திய சேவை அதிகாரி என்பவர் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான பாலமாவார். சிவில் சர்வீஸ் அதிகாரிகளை மத்திய அரசு நிர்வாகத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு ஏற்கனவே ஒரு அமைப்பு வகுக்கப்பட்டுள்ளது. அது தீவிரமாக பின்பற்றப்பட வேண்டும்' என தெரிவித்தார்.

மத்திய அரசில் ஐ.ஏ.எஸ் மற்றும் பிற அகில இந்திய சேவை அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்தை மாநில அரசுகள் அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், இதைப்போல ஊழல் மற்றும் திறமையற்ற அதிகாரிகளை களையெடுக்க உதவுமாறும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்