< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ரெயில் நிலையத்தில் 'ரீல்ஸ்' வீடியோவுக்காக நடனமாடிய பெண்கள் - போலீசார் தேடல்
|25 Feb 2024 8:56 AM IST
'ரீல்ஸ்' வீடியோவுக்காக ரெயில் நிலையத்தில் நடனமாடிய பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மும்பை,
மலாடு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் வாசலில் நின்ற ரெயில் பயணியின் கையை பிடித்தபடி பெண் ஒருவர் நடனமாடி உள்ளார். அதே ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தையொட்டி பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ரெயில் கடந்து சென்றபோது அவர் ரெயிலின் அருகே நின்றபடி நடனமாடினார். மேலும் வாசற்படியில் நின்று பயணித்த பயணிகளை நோக்கி சத்தம் போட்டு உள்ளார். அவர்கள் 'ரீல்ஸ்' வீடியோவுக்காக இவ்வாறு நடனமாடி உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்த சம்பவங்கள் பற்றி அறிந்த ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் நடனமாடிய பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.