< Back
தேசிய செய்திகள்
தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் அமலாக்கம் குறித்து மத்திய மந்திரி ஆய்வு
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் அமலாக்கம் குறித்து மத்திய மந்திரி ஆய்வு

தினத்தந்தி
|
7 Oct 2022 3:04 PM IST

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் அமலாக்கம் குறித்து மத்திய இணைமந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

சென்னை:

தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் அமலாக்கம் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணைமந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தில் தமிழக அரசின் திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் சங்கர்லால் குமாவட் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் அமலாக்கப்படும் நிலை குறித்து எடுத்துரைத்தனர். இந்த கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அலுவலர்களும் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, தேசிய புள்ளியியல் அமைப்பின் தமிழ்நாடு மண்டல அதிகாரிகளுடன் பணிகள் முன்னேற்றம் குறித்து மத்திய இணைமந்திரி ராவ் இந்தர்ஜித் சிங் ஆலோசனை நடத்தினார்.

இந்த அமைப்பின் துணைத் தலைமை இயக்குனரும், மண்டல அதிகாரியுமான பி டி சுபா, பெங்களூருவில் உள்ள தென் மண்டல அலுவலகத்தின் துணைத் தலைமை இயக்குனர் ஆர் மனோகர் உள்ளிட்ட அதிகாரிகள் தேசிய புள்ளியியல் அமைப்பின் தமிழ்நாடு மண்டல பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும் செய்திகள்