< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்தியாவில் இருந்து 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
|27 April 2024 8:40 PM IST
6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஆண்டை விட 2023-24ம் ஆண்டில் காரீப் மற்றும் ராபி பயிர்கள் குறைவாக இருப்பதாலும், உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாகவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனால் அண்டை நாடுகளில் வெங்காயம் விலை உயர்ந்தது.
இந்த நிலையில் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீசியஸ் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மத்திய கிழக்கு மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு 2,000 மெட்ரிக டன் வெள்ளை வெங்காயத்தை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.