< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம்- மத்திய அரசு
|21 Nov 2023 3:14 PM IST
சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.
புதுடெல்லி,
கார்த்திகை மாதத்தையொட்டி ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியதை அடுத்து நேற்று முதல் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சந்தனம், துளசி மாலை, காவி, நீலம் மற்றும் கருப்பு நிறத்திலான வேஷ்டி, துண்டுகள் ஆகியவற்றின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஜனவரி 15ம் தேதி வரை விமானத்தில் இருமுடி கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முறையான பாதுகாப்பு சோதனைகளுக்கு பின்னர் எடுத்து செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.