< Back
தேசிய செய்திகள்
பழைய வாகனங்களை அகற்ற மத்திய அரசு உத்தரவு - கால அவகாசம் கோரி போக்குவரத்துத்துறை கடிதம்
தேசிய செய்திகள்

பழைய வாகனங்களை அகற்ற மத்திய அரசு உத்தரவு - கால அவகாசம் கோரி போக்குவரத்துத்துறை கடிதம்

தினத்தந்தி
|
2 April 2023 8:35 AM IST

பழைய வாகனங்களை அகற்ற மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கால அவகாசம் கோரி போக்குவரத்து துறை கடிதம் அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் இயக்கப்பட்டுவரும், 15 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திய வாகனங்களை ஸ்க்ராப்பிங் முறையில் அகற்ற வேண்டுமென மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது வரை தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஸ்க்ராபிக் முறையில் காலாவதியான வாகனங்களை அகற்றும் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், கால அவகாசத்தை ஐந்தாண்டுகள் நீடிக்கும்படி, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

குறிப்பாக போக்குவரத்து துறை, மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட வாகனங்களுக்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.




மேலும் செய்திகள்