< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி அவசர சட்ட மசோதா - மக்களவையில் இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு
|1 Aug 2023 4:16 AM IST
இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.
இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல் மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு மாநில முதல் மந்திரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
பாராளுமன்றத்தில் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை முறியடிக்க ஒத்துழைப்பை அளிப்பதாக பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, கடந்த மாதம் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.