< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 10 ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் - காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி
|1 Dec 2022 5:54 PM IST
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மும்பை,
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 25 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், ஆனால் மத்திய அரசோ பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயைக் கூட குறைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பிரதமர் தனது வசூலில் மூழ்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.