< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
புதுச்சேரி தலைமை செயலாளர் மீது கண்டன தீர்மானம் - எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
|29 March 2023 12:21 AM IST
புதுச்சேரி தலைமை செயலாளர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றக்கோரி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில், முதல்-அமைச்சர் ரங்கசாமி திட்டங்கள் தொடர்பாக அனுப்பும் கோப்புகளுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்புவதாக அம்மாநில தலைமை செயலாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தலைமை செயலாளர் மீது கண்டன தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று நேற்று சட்டசபையில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன், தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சருடன் கலந்துபேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் செல்வம் தெரிவித்தார்.