< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவின்போது பட்டாசு வெடித்த தொண்டர்கள்: பற்றி எரிந்த பா.ஜ.க. அலுவலகம்
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவின்போது பட்டாசு வெடித்த தொண்டர்கள்: பற்றி எரிந்த பா.ஜ.க. அலுவலகம்

தினத்தந்தி
|
10 Jun 2024 4:09 AM IST

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவின்போது தொண்டர்கள் வெடித்த பட்டாசால் பா.ஜ.க. அலுவலகம் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூர்,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதையடுத்து, நாட்டின் பிரதமராக மோடி தொடர்ந்து 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிரதமர் மோடியுடன், 71 மத்திய மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், மோடிக்கு ஜனதிபதி முர்மு பிரதமர் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற விழாவை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடினர்.

அந்த வகையில் மத்தியபிரதேசம் இந்தூர் பா.ஜ.க. அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பட்டாசு வெடித்தபோது சில பட்டாசுகள் வெடித்து சிதறியதில் பா.ஜ.க. அலுவலகத்தில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து அனைவரும் தப்பியோடினர்.

இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப்படையினர் விரைந்து வந்த பா.ஜ.க. அலுவலகத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்