< Back
தேசிய செய்திகள்
பாஸ்போர்ட் மோசடி விவகாரம்: சிக்கிம், மே.வங்காளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
தேசிய செய்திகள்

பாஸ்போர்ட் மோசடி விவகாரம்: சிக்கிம், மே.வங்காளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

தினத்தந்தி
|
15 Oct 2023 6:39 AM IST

பாஸ்போர்ட் மோசடி விவகாரம் தொடர்பாக சிக்கிம், மேற்கு வங்காளத்தில் 50 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

காங்டாக்,

சிக்கிம் மற்றும் மேற்குவங்காள மாநிலங்களில் போலி ஆவணங்கள் மூலம் தகுதியற்ற நபர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கி மிகப்பெரிய அளவில் மோசடி நடந்ததாக சி.பி.ஐ.யிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சிக்கிம் மற்றும் மேற்குவங்காள மாநிலங்களில் சுமார் 50 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து இந்த மோசடி தொடர்பாக சிக்கிமின் காங்டாக் நகரில் பணியாற்றி வந்த பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் இடைத்தரகர் ஒருவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

மோசடி தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் 16 அரசு அதிகாரிகள் உள்பட 24 நபர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. லஞ்சம் பெற்றுக் கொண்டு குடியுரிமை இல்லாதவர்கள் உட்பட தகுதியற்ற நபர்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்