< Back
தேசிய செய்திகள்
ரூ.34 ஆயிரம் கோடி வங்கி மோசடி டி.எச்.எப்.எல். நிர்வாக இயக்குனர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு
தேசிய செய்திகள்

ரூ.34 ஆயிரம் கோடி வங்கி மோசடி டி.எச்.எப்.எல். நிர்வாக இயக்குனர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

தினத்தந்தி
|
23 Jun 2022 12:12 AM GMT

திவான் வீட்டு வசதி நிதி கழக (டி.எச்.எப்.எல்.) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் கபில் வதாவன்.

புதுடெல்லி,

திவான் வீட்டு வசதி நிதி கழக (டி.எச்.எப்.எல்.) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தவர் கபில் வதாவன். இயக்குனராக இருந்தவர் தீரஜ் வதாவன்.

இவர்கள் யூனியன் பேங்க் இந்தியா தலைமையிலான 17 வங்கிகள் கூட்டமைப்பை ரூ.34 ஆயிரத்து 615 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அந்த வங்கிகள் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் சி.பி.ஐ.யிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. புகாருக்கு முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததால், டி.எச்.எப்.எல். நிறுவனம், கபில் வதாவன், தீரஜ் வதாவன், 6 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ.யால் விசாரிக்கப்படும் மிகப்பெரிய வங்கி மோசடி வழக்கு இதுவே ஆகும்.

மேலும் செய்திகள்