< Back
தேசிய செய்திகள்
பொன்மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பொன்மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
25 Nov 2022 1:55 AM IST

பொன்மாணிக்கவேலுக்கு எதிரான சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறி முன்னாள் திருவள்ளூர் போலீஸ் டி.எஸ்.பி. காதர்பாட்ஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். உண்மையான குற்றவாளியை தப்பிக்க வைக்கவே தன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளதாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும் கூறி சென்னை ஐகோர்ட்டில் காதர்பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பொன்மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரியும் பொன்மாணிக்கவேல் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் கிருஷ்ண முராரி, எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த மனு தொடர்பாக 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், சி.பி.ஐ.க்கும், காதர் பாட்சாவுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர் ஆனால் அதேசமயம் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

மேலும் செய்திகள்