< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் 24-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
தேசிய செய்திகள்

டெல்லியில் 24-ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்

தினத்தந்தி
|
18 July 2024 5:27 PM IST

காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.

புதுடெல்லி,

காவிரி ஒழுங்காற்று குழுவின் 99-வது கூட்டம் கடந்த 11-ம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையில் 20 நாட்களுக்கு தினமும் 1 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

ஆனால் 20 நாட்களுக்கு 1 டிஎம்சி தண்ணீர் வழங்க முடியாது எனக்கூறிய கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா, தமிழகத்துக்கு தினமும் ஒரு டி எம் சி தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக, வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்த நீரை வழங்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் வருகிற 24-ம் தேதி இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு குறித்து தமிழக, கர்நாடக அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்