< Back
தேசிய செய்திகள்
காவிரி மேலாண்மை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்கன்னட அமைப்பினர் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும்கன்னட அமைப்பினர் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
4 Sept 2023 12:15 AM IST

மைசூரில் காவிரி மேலாண்மை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மைசூரு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அணைகள் முழுமையாக நிரம்பவில்லை. இதனால், மாநிலத்தில் வறட்சி நிலவி வருகிறது. இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியா, மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மைசூரு டவுனில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கூறுகையில், போதிய மழை பெய்யாத நிலையில், காவிரியில் தண்ணீர் திறந்து விட கோரி கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பது சரியல்ல. கர்நாடகத்தின் நிலை யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை.

தமிழக அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. அந்த ஆணையத்தில் கர்நாடகத்துக்கு எந்த நியாயமும் கிடைக்கவில்லை.

இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தை ரத்து செய்ய வேண்டும். கே.ஆர்.எஸ். அணை கட்டும் போது மன்னர் காலத்தில் இருந்தே தமிழகம் தொந்தரவு யெ்து வருகிறது. தற்போது காவிரி பங்கீட்டு விஷயத்திலும் கர்நாடகத்துக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்றனர்.

மேலும் செய்திகள்