< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

தினத்தந்தி
|
22 Aug 2024 8:23 AM IST

பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

காவிரி நீர் பங்கீட்டில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவை பேசி தீர்த்து வருகின்றன.

இந்த வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 32 முறை கூடியுள்ளது. இதன் 33-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்