< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கர்நாடகாவில் போராட்டம் நடைபெறும் நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது
|29 Sept 2023 2:38 PM IST
காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கூடியுள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதைக் கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த நிலையில் கர்நாடகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் கூடியுள்ளது. இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 12,500 கனஅடி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்க தமிழக அரசு அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.