< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்; 4-ந் தேதி நடக்கிறது
|29 March 2024 9:56 PM IST
காவிரியில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகமும், திறக்கக்கூடாது என்று தமிழகமும் வலியுறுத்தி வருகின்றன.
புதுடெல்லி,
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் வருகிற 4-ந் தேதி டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்துக்கான அழைப்பை தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் விடுத்துள்ளார்.
காவிரியில் இருந்து குடிநீருக்காக கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்று கர்நாடகமும், திறக்கக்கூடாது என்று தமிழகமும் வலியுறுத்தி இருந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.