< Back
தேசிய செய்திகள்
காவிரி பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும் - தேவகவுடா
தேசிய செய்திகள்

காவிரி பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும் - தேவகவுடா

தினத்தந்தி
|
18 Sept 2023 5:18 PM IST

காவிரி பிரச்சினையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று தேவகவுடா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் காவிரி நீர் விவகாரம் குறித்து மாநிலங்களவையில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடா பேசியதாவது:-

காவிரி பிரச்சினையை மாநிலங்கள் பேசித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். மாநிலங்கள் பேசி தீர்க்காவிட்டால் இறுதி வரை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான தீர்வு கிடைக்கும் என்றால்? எனக்கு தெரியாது. சட்ட போராட்டம் இந்த பிரச்சினையை தீர்க்காது. இது போன்ற வழக்குகள் நீண்டு கொண்டேதான் போகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்