< Back
தேசிய செய்திகள்
காவிரி விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - டி.கே சிவக்குமார்
தேசிய செய்திகள்

காவிரி விவகாரம்: கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - டி.கே சிவக்குமார்

தினத்தந்தி
|
10 Oct 2023 3:51 PM IST

காவிரி விவகாரத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில துணை முதல் மந்திரி டி.கே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாக நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்திற்கு போட்டியாக கர்நாடக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே சிவக்குமார் கூறுகையில், " கர்நாடகாவில் நீர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும். எங்களது விவசாயிகள் நலனை நாங்கள் பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்