< Back
தேசிய செய்திகள்
காவிரி வழக்கு செப்.6-ல் விசாரணை.. சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
தேசிய செய்திகள்

காவிரி வழக்கு செப்.6-ல் விசாரணை.. சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

தினத்தந்தி
|
1 Sep 2023 9:04 AM GMT

காவிரி நிதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு செப்டம்பர் 6-ந்தேதி விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வர இருந்தது.

ஆனால், ஜம்மு காஷ்மீர் வழக்கு (370) சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த வழக்கை மிக முக்கியமான வழக்காக கருதி வாரத்தில் 5 நாட்களும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் காவிரி வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதிகளிடம் முறையிட்டனர். இதனை தொடர்ந்து வருகிற புதன் கிழமை காவிரி தொடர்பான வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்ததுடன், அதுவரை காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்போதைய உத்தரவுகள் தொடரும் என்றும் தெரிவித்தனர்.

வழக்கு புதன் கிழமை விசாரிக்கப்பட உள்ளதால், அதுவரையில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, கர்நாடகா தமிழகத்துக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடுவதில் எந்த தடையும் இருக்காது.

மேலும் செய்திகள்