< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஐ-போனை வழங்க தாமதம்: கடை ஊழியருக்கு அடி-உதை; இருவர் கைது
|24 Sept 2023 1:30 AM IST
ஐ-போனை வழங்க தாமதமானதால் கடை ஊழியருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன் வரிசையில் 'ஐ-போன்-15' விற்பனைக்கு வந்து உள்ளது. மும்பை, டெல்லியில் உள்ள ஆப்பிள் 'ஐ-போன்' விற்பனை நிலையங்களில் விற்பனை நடைபெற்று வருகிறது. புதிய ஐ-போனை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் முதல் நாள் முதலே குவியத்தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று டெல்லியின் ரூப் நகரில் உள்ள எலக்ட்ரானிக் கடை ஒன்றில் ஆர்டர் செய்த ஐ-போனை வழங்க தாமதமானதால் கடை ஊழியரை 2 வாலிபர்கள் தாக்கி உள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற போலீசார், கடை ஊழியர்களை தாக்கியதாக 2 பேரை கைது செய்தனர்.