< Back
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீர்-கந்தர்பால் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் பனிச்சரிவு
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்-கந்தர்பால் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் பனிச்சரிவு

தினத்தந்தி
|
12 Jan 2023 2:33 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோனாமார்க் மலைப் பிரதேசத்தில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டது.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோனாமார்க் மலைப் பிரதேசத்தில் இன்று பனிச்சரிவு ஏற்பட்டது. மத்திய காஷ்மீரில் உள்ள கந்தர்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள சோனாமார்க்கில் உள்ள பால்டால் பகுதிக்கு அருகே பனிச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஹாங்கில் சிறிய அளவிலும் சர்பலில் பெரிய அளவிலும் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பனிச்சரிவில் எந்தவித உயிர்சேதமும், பொருள் சேதமும் இல்லை என கந்தர்பால் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஸ்ரீநகரில் வெப்பநிலை சுமார் 3 டிகிரி செல்சியசாகவும், அதே வேளையில், பள்ளத்தாக்கின் நுழைவாயிலான காசிகுண்டில் குறைந்தபட்சம் 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்