< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
|20 April 2023 4:24 PM IST
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்டது பயங்கரவாத தாக்குல் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பிம்பர் காலி மற்றும் பூஞ்ச் இடையே சென்ற போது இந்த தாக்குதல் நடைபெற்றதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக ராணுவ வாகனம் தீ பிடித்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது பயங்கரவதிகள் கையெறி குண்டு வீசியதில் தான் ராணுவ வாகனம் தீ பிடித்துள்ளதை விசாரணையில் ராணுவம் கண்டறிந்துள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர்.