சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை -மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே
|மோடி பிரதமரான பிறகு ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்,
மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து இருந்தது. மோடி பிரதமரான பிறகு ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள்தொகை அதிகரித்துள்ளது. அதனால் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று அந்த மக்கள் கேட்கிறார்கள். இது நியாயமான கோரிக்கை. அவர்களுக்கு தற்போது 22½ சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
நாட்டில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதாக ராகுல் காந்தி சொல்கிறார். முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இதை அவர் ஏன் செய்யவில்லை?. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவை. அதை நடத்த வேண்டும் என்று நாங்களும் கேட்கிறோம். வரும் காலத்தில் பிரதமர் மோடி இதை செய்வார் . வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளிலும், பா.ஜனதா 370 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.