< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
|21 Sept 2022 12:15 AM IST
சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா மகலி கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 8 பேர் காசு வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களில் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மற்ற 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். கைதானவர்கள் மகலி கிராமத்தை சேர்ந்த நாகராஜ், மஞ்சப்பா, மது, முரளப்பா என்று தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரம் ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள், ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.