< Back
தேசிய செய்திகள்
கன்னட நடிகர் சந்திரபிரபா மீது வழக்குப்பதிவு
தேசிய செய்திகள்

கன்னட நடிகர் சந்திரபிரபா மீது வழக்குப்பதிவு

தினத்தந்தி
|
8 Sept 2023 12:15 AM IST

கார் மோதி ஜவுளிக்கடை ஊழியர் படுகாயம் அடைந்த வழக்கில் கன்னட நடிகர் சந்திரபிரபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா ஹகலஹள்ளி கிராமத்தை சேர்ந்த மாலதேஸ் சிக்கமகளூரு பஸ் நிலையம் அருகே ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி மாலதேஸ் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் மாலதேஸ் படுகாயமடைந்தார். இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், மாலதேஸ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் பெங்களூருவை சேர்ந்த கன்னட காமெடி நடிகர்் சந்திர பிரபா என்பவருடையது என ெதரியவந்தது.

இதுகுறித்து டவுன் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் சந்திரபிரபா நிருபர்களிடம் கூறுகையில், சிக்கமகளூரு பஸ் நிலையம் பகுதியில் நான் காரை ஓட்டி சென்றேன். அப்போது அந்த வழியாக வந்த மாலதேஸ் கார் மீது விழுந்து மயக்கம் அடைந்தார்.

அவரை அருகில் இருந்த ஆட்டோ டிரைவர் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தேன். எனக்கு படப்பிடிப்புக்கு நேரம் ஆனதால் அங்கிருந்து உடனே கிளம்பி சென்றேன். காரில் விழுந்த நபர் மதுபோதையில் இருந்தார். மறுநாள் எனது எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது காரை நான்தான் ஓட்டினேன் என கூறினேன். மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க நாளை (இன்று) சிக்கமகளூரு டவுன் போலீஸ் நிலையத்திற்கு செல்ல உள்ளேன், என்றார்.


மேலும் செய்திகள்