< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டில் யாசின் மாலிக் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம் - 4 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் யாசின் மாலிக் ஆஜர்படுத்தப்பட்ட விவகாரம் - 4 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
22 July 2023 9:22 PM IST

கோர்ட்டு உத்தரவிடாத பட்சத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்தியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

புதுடெல்லி,

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் யாசின் மாலிக், தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே மற்றொரு வழக்கில் யாசின் மாலிக்கை போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவிடாத பட்சத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்தியது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் தொடர்பான பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை செயலாளருக்கு சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருந்தால் சுப்ரீம் கோர்ட்டின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் யாசின் மாலிக்கை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக திகார் சிறை இணை கண்காணிப்பாளர் மற்றும் இரண்டு துணை கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்