< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விடுதி பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட அமெரிக்கர்..!
|10 Dec 2023 1:16 PM IST
பெண் ஊழியர் அறைக்கு வந்தபோது அவர் அணிந்திருந்த இரவு உடையை திடீரென அகற்றியுள்ளார்.
தானே,
26 வயது அமெரிக்காவைச் சேர்ந்த நபர், மும்பை விடுதியில் அங்குப் பணியாற்றும் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நவி மும்பை பகுதி காவலர்கள் கூறியதாவது:
டர்பே பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த, அமெரிக்கா பென்சில்வேனியாவைச் சேர்ந்த நபர், நேற்று காலை 11.30 மணிக்கு விடுதியில் பணியாற்றும் பெண் ஊழியர் அறைக்கு வந்தபோது அவர் அணிந்திருந்த இரவு உடையை திடீரென அகற்றியுள்ளார். இதனால் அலறி அடித்துக்கொண்டு வெளியேறிய பெண் ஊழியர் நடந்த சம்பவத்தை கூறி விடுதி நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக பாலியல் செயலுக்கு வற்புறுத்தியதாக பெண் ஊழியர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் காவலர்கள் கூறினர்.